சிவகங்கை, சிங்கம்புணரியில், தமிழ்வழி கல்வியை பாதுகாக்க கோரி வாகன பிரசாரம்


சிவகங்கை, சிங்கம்புணரியில், தமிழ்வழி கல்வியை பாதுகாக்க கோரி வாகன பிரசாரம்
x
தினத்தந்தி 27 Sept 2019 3:00 AM IST (Updated: 27 Sept 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை, சிங்கம்புணரியில் தமிழ்வழி கல்வியை பாதுகாக்க கோரி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கல்வி பாதுகாப்பு வாகன பிரசாரம் செய்யப்பட்டது.

சிங்கம்புணரி,

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழ்வழி கல்வியை ஊக்குவிப்போம், மூடிய பள்ளிகளை திறக்க அரசை வலியுறுத்துவோம், அரசு பள்ளிகளை பாதுகாப்போம், தொடக்கக் கல்வியை அழிக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 25-ந் தேதி முதல் வாகன பிரசாரம் தொடங்கி, வருகிற 29-ந் தேதி வரை நடைபெறுகிறது.

அதன்படி நேற்று சிங்கம் புணரியில் நடந்த பிரசாரத்திற்கு மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாவட்ட பொருளாளர் குமரேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஞான அற்புதராஜ், சிங்கராயர் ஆரோக்கியராஜ், துணை செயலாளர் ரவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், வட்டார செயலாளர் சுரேஷ், தலைவர் பாலகிருஷ்ணன், மாநில துணை தலைவர்கள் அலோசியஸ், ரஹீம், ஜோசப் ரோஸ், மாநில செயலாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்தனர். முடிவில் வட்டார பொருளாளர் ஞானவிநாயகம் நன்றி கூறினார். வருகிற 29-ந்தேதி கரூரில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக பிரசாரத்தில் கூறப்பட்டது.

தென் மத்திய மண்டலம் சார்பாக ராமநாதபுரத்தில் தொடங்கிய பிரசாரம் நேற்று மாலை சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு வந்தது. சிவகங்கையில் நடந்த பிரசாரத்திற்கு மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர், மாநில பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட துணை தலைவர் மாலா, துணை செயலாளர்கள் ஜெயக்குமார், ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர், மாநில துணை தலைவர்கள், மாநில செயலாளர், வட்டார செயலாளர் பஞ்சுராஜ், த.மு.எ.க.ச. மாவட்ட செயலாளர் சங்கரசுப்பிரமணியன், ஜாக்டோ-ஜியோ முன்னாள் ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். 

Next Story