தேசிய நெடுஞ்சாலை அமைப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் - கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது


தேசிய நெடுஞ்சாலை அமைப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் - கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 27 Sept 2019 3:45 AM IST (Updated: 27 Sept 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

தேசிய நெடுஞ்சாலை அமைப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.

மத்திகிரி, 

தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் வட்டங்களில் அமைய உள்ள புதிய தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் ஓசூரில் உள்ள மாவட்ட வன அலுவலர், வளாகத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

இந்த திட்டம் குறித்த விவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த விவரங்களை நிழற்படம் மூலமாக அதிகாரிகள் எடுத்து கூறினர். தொடர்ந்து பொதுமக்களிடம் இது தொடர்பாக கருத்துக்கள் கேட்கப்பட்டது.

அப்போது பொதுமக்கள் சாலை பணிக்கு ஆர்ஜிதம் செய்யப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சாலையில் சீரான இடைவெளியில் நீர் பாசன பைப்புகள் கொண்டு செல்வதற்கு வழிகள் வேண்டும். நிலம் வழங்கும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். சாலை பணிக்கு நன்செய் நிலங்களை தவிர்க்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த கூட்டத்தில் ஓசூர் உதவி கலெக்டர் குமரேசன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பழனிசாமி, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட மேலாளர் சோமசேகர், உதவி பொறியாளர் செல்வகணபதி, தாசில்தார் பாலசுந்தரம், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story