கலெக்டர் அலுவலகம் முன்பு மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகம் முன்பு மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2019 3:45 AM IST (Updated: 27 Sept 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகம் முன்பு மண்பாண்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் மற்றும் மண்பாண்ட தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் காங்கேயன், செயலாளர் பாரி, பொருளாளர் தண்டபாணி, மண்பாண்ட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் முருகன், செயலாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், நாட்டு ஓடு, நாட்டு செங்கலை உற்பத்தி தொழில் செய்வோரின் ஜீவாதார உரிமையை பாதுகாத்திட வேண்டும். புதிய, புதிய உத்தரவுகளாலும், நிபந்தனைகளாலும் தொழிலை முடக்க கூடாது. பாரம்பரியமான மண்பாண்ட தொழிலாளர்கள் ஏரிகளில் மண் எடுக்க அனுமதி தரும் உத்தரவை அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதில் கட்டுமான தொழிலாளர்கள், மண்டபாண்ட தொழிலாளர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் விவசாயிகள் தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகலநாதன் நன்றி கூறினார்.

Next Story