போலீஸ் பாதுகாப்புடன் சந்தைப்பேட்டை கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்


போலீஸ் பாதுகாப்புடன் சந்தைப்பேட்டை கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x
தினத்தந்தி 27 Sept 2019 4:30 AM IST (Updated: 27 Sept 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் பாதுகாப்புடன் சந்தைப்பேட்டை கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

லாலாபேட்டை,

கரூர் மாவட்டம், லாலாபேட்டை அருகே உள்ள சந்தைப்பேட்டை கடைவீதியில் இருந்து ரெயில்வே கேட்டு வரை சாலையின் இருபுறங்களிலும் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கள்ளப்பள்ளி மற்றும் சிந்தலவாடி ஊராட்சி சார்பில் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை.

அகற்றம்

இதையடுத்து நேற்று காலை கிரு‌‌ஷ்ணராயபுரம் நெடுஞ் சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் பொன்வேல் தலைமையில் சந்தைப்பேட்டை கடைவீதியில் இருந்து ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டது. அப்போது உதவிப்பொறியாளர் தங்கவேல், மாயனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா, சிந்தலவாடி வருவாய் ஆய்வாளர் சின்னசக்கையா, கிராம நிர்வாக அதிகாரிகள் உடனிருந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபோது சிலர் தானாகவே முன்வந்து தங்களது கடைகளின் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி கொண்டனர்.

Next Story