காங்கிரஸ் பிரமுகர் கொலை: நண்பர்களுக்காக தீர்த்து கட்டினோம் கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்
காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகரை நண்பர்களின் வேண்டுகோளுக்காக கொலை செய்ததாக கைதானவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
காலாப்பட்டு,
புதுவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜோசப் கடந்த ஆண்டு வெட்டிக் கொல்லப்பட்டார். தொழில்போட்டி காரணமாக நடந்த இந்த கொலை வழக்கில் காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் உள்பட 15 பேரை ஆரோவில் போலீசார் அப்போது கைது செய்தனர். தற்போது அவர்கள் அனைவரும் ஜாமீனில் வெளிவந்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர் கடந்த 23-ந் தேதி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். கனகசெட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனை எதிரே சென்ற போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது. இது குறித்து சந்திரசேகரின் மனைவி சுமலதா கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பேரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக காலாப்பட்டு குப்பத்தை சேர்ந்த சுகன், கணுவாப்பேட்டை அப்துல் நசீர், மேட்டுப்பாளையம் ரங்கராஜ் ஆகியோர் புதுவை கோர்ட்டில் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் அவர்கள் 3 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த காலாப்பட்டு போலீசார் புதுவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அவர்களை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதனை தொடர்ந்து சரண் அடைந்த 3 பேரையும் காலாப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் காவலில் எடுத்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறியதாவது:-
புதுவையை சேர்ந்த 2 முக்கிய ரவுடிகள் எங்களுக்கு நண்பர்களாக உள்ளனர். அவர்களுக்கு நண்பராக காலாப்பட்டு ஜோசப் இருந்து வந்தார். கடந்த ஆண்டு எதிரிகள் காலாப்பட்டு ஜோசப்பை கொலை செய்தனர். இதற்கு பழிக்குப்பழியாக சந்திர சேகரை கொலை செய்யும்படி அந்த ரவுடிகள் எங்களிடம் கூறினர். நண்பர் என்ற முறையில் அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் கடந்த சில நாட்களாக நாங்கள் சந்திரசேகரை பின்தொடர்ந்து கண்காணித்து, அவரை தீர்த்துக் கட்டினோம். இதற்காக பணம் எதுவும் பெறவில்லை. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் அந்த 2 ரவுடிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே தலைமறைவாக உள்ள ஜோசப்பின் மகன் உள்பட மற்றவர் களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story