அ.ம.மு.க. பொதுக்கூட்டம்: காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை சி.ஆர்.சரஸ்வதி குற்றச்சாட்டு
புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சி.ஆர்.சரஸ்வதி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் சுதேசி மில் அருகே நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில செயலாளர் வேல்முருகன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், நிர்வாகிகள் சுப்ரமணியன், வீரப்பன், தவமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ரங்கசாமி, கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, முன்னாள் எம்.எல்.ஏ. அருள் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இதில் சி.ஆர்.சரஸ்வதி பேசியதாவது:-
தமிழகம்- புதுச்சேரியில் நிலை மோசமாக உள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜனதா ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருகிறார்கள். புதுச்சேரியை பொறுத்தவரை காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரசார் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. எதிர்க்கட்சியும் செயல்படாமல் உள்ளது. அரும்பார்த்தபுரம் ரெயில்வே பாலத்தை கட்டி முடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. சாலைகள் மிகவும் மோசமாக இருக்கிறது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினை சீர்கெட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக நிர்வாகிகள் நாக.லோகநாதன் வரவேற்றார். முடிவில் சிராஜ் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story