மூடிய பள்ளிகளை திறக்க கோரி வாகன பிரசாரம்
தேவகோட்டை, திருப்பத்தூர் பகுதிகளில் மூடிய பள்ளிகளை திறக்க கோரி விழிப்புணர்வு வாகன பிரசாரம் நடைபெற்றது.
தேவகோட்டை,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழ்வழி கல்வியை ஊக்குவிப்போம், மூடிய பள்ளிகளை திறக்க அரசை வலியுறுத்துவோம், அரசு பள்ளிகளை பாதுகாப்போம் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென் மண்டலம் சார்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கல்வி உரிமை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பிரசாரம் தேவகோட்டை ஒத்தக்கடை வந்தது. அங்கிருந்து இருசக்கர வாகனங்களில் சென்று தியாகிகள் பூங்கா அருகே தமிழ்வழி கல்வி பாதுகாப்பு குறித்த பிரசாரம் நடைபெற்றது.
இதேபோல திருப்பத்தூர் அண்ணாசிலை அருகே நடந்த வாகன பிரசார கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி, மாவட்ட பொருளாளர் குமரேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சிங்கராயர் ஆரோக்கியராஜ், துணை செயலாளர் ரவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் பிரசார விளக்கவுரை ஆற்றினார்.
வட்டார செயலாளர் முத்துமாரியப்பன், மாநில துணைத் தலைவர்கள் அலோசியஸ், ரஹீம், ஜோசப் ரோஸ், மாநில செயலாளர் முருகன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்தனர்.

Related Tags :
Next Story