குடியிருப்பு கட்டிடத்தில் போலீஸ் சோதனை; பயங்கர ஆயுதங்களுடன் 2 பேர் கைது


குடியிருப்பு கட்டிடத்தில் போலீஸ் சோதனை; பயங்கர ஆயுதங்களுடன் 2 பேர் கைது
x
தினத்தந்தி 28 Sept 2019 4:30 AM IST (Updated: 28 Sept 2019 1:31 AM IST)
t-max-icont-min-icon

தானே அருகே கிசான் நகரில் உள்ள ஒரு குடியிருப்பில் பயங்கர ஆயுதங்களுடன் 2 பேர் தங்கி இருப்பதாக அப்பகுதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தானே, 

போலீசார் சம்பந்தப்பட்ட குடியிருப்பு கட்டிடத்துக்குள் நேற்று காலை 7 மணியளவில் நுழைந்து அங்குள்ள அறையில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் அந்த அறையில் இருந்து 4 வாள்கள், வெட்டுக்கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் அங்கு இருந்த 2 பேரை கைது செய்தனர். விசாரணையில், அவர்களது பெயர் பியூஷ் தேவ்நாத்(வயது36), சுஜித் சுவ பதாக்(30) என்பது தெரியவந்தது.

அவர்கள் என்ன காரணத்துக்காக ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளனர் என்பதை கண்டறிய அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story