5-ம் கட்ட அகழாய்வு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு: கீழடியில் ரூ.15 கோடியில் அருங்காட்சியகம் - அமைச்சர் க.பாண்டியராஜன் தகவல்
கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வு பணி மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்றும், அங்கு ரூ.15 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் க.பாண்டியராஜன் கூறினார்.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 5-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், கைத்தறி துறை அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அவர்களுடன் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தனும் வந்திருந்தார்.
பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக கீழடி அகழ்வாராய்ச்சி திகழ்கிறது. வருகிற 30-ந் தேதியுடன் நிறைவு பெற இருந்த 5-ம் கட்ட அகழாய்வு பணிகளை மேலும் 2 வாரத்துக்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 70 இடங்களில் 120 அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. கீழடியில் ஒளி மூலம் தொன்மையை கண்டறிந்து வருகிறோம். மேலும் அணுக்கதிர் வழியாகவும் ஆய்வு நடைபெறுகிறது. கீழடியில் மத்திய தொல்லியல் துறையினர் கடந்த 2015 முதல் 2017-ம் ஆண்டு வரை நடத்திய 3 கட்ட அகழ்வாராய்ச்சியில் முதல் மற்றும் 2-வது கட்ட அகழ்வாராய்ச்சி அறிக்கையை தமிழக தொல்லியல் துறையிடம் ஒப்படைத்துள்ளது.
கீழடி அகழ்வாராய்ச்சியை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம். வான்வெளி, தரைவழி உள்பட 11 முறைகளில் இந்த ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. உலக வரலாற்றில் கீழடி அகழ்வாராய்ச்சி மிகவும் முக்கியமானது.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியானது, தொல்லியல் துறையின் பொற்காலமாக திகழ்கிறது. தென் தமிழகத்தை தொல்லியல் துறை புறக்கணிக்கவில்லை. கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முன்பே சிலிக்கா மணல் என்ற உயர்தர மணல் இருந்துள்ளது. அக்கால மக்கள் கட்டுமானத்தின் போது அந்த சிலிக்கா மணலுடன் அலுமினிய பொருட்களையும் பயன்படுத்தி கட்டி உள்ளனர்.
கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பானை ஓடுகளின் மீது உள்ள கீறல்களுக்கும், சிந்து சமவெளி நாகரிகத்திற்கும் ஒற்றுமை இருந்துள்ளது. 2600 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.
கீழடியில் தொழிலும் மேலோங்கி இருந்தது. உதாரணமாக நெசவு தொழில் செய்வதற்கான ஊசி உள்ளிட்ட பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மேலும் தங்க பொருட்கள், பகடை காய் போன்ற விளையாட்டு பொருட்களும் கிடைத்துள்ளன.
மேலும் மத்திய தொல்லியல் துறை வசம் உள்ள 8 ஆயிரம் பொருட்களை தமிழக தொல்லியல் துறைக்கு வழங்க உள்ளனர். விரைவில் கீழடியில் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சியை மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து தமிழக தொல்லியல் துறையும் நடத்த உள்ளது.
கீழடியில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அருங்காட்சியகம் கட்டப்படும். மத்திய அரசின் நிதிக்காக கீழடி அகழ்வாராய்ச்சியில் எவ்வித தொய்வும் வரக்கூடாது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அடுத்து நடைபெறும் 6-வது கட்ட அகழ்வாராய்ச்சியானது கீழடி மட்டுமல்லாமல் மணலூர், அகரம், கொந்தகை ஆகிய பகுதிகளிலும் நடைபெற மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளோம்.
ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி அறிக்கை விரைவில் வெளியிடப்படும். இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே அதிக அளவில் கல்வெட்டுகள் உள்ளன. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்க ஹார்டுவேர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கீழடி அகழ்வாராய்ச்சி பணிகளை செய்து வருகிறோம்.
‘கார்பன்-டேட்டிங்’ பரிசோதனையை 15 நாட்களில் செய்வதற்கான வசதிகள் விரைவில் கிடைக்க உள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்து 35 ஆயிரம் தொல்லியல் பொருட்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், நாகராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் புவனேந்திரன், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் செவ்வராஜ் மற்றும் பலர் உடனிந்தனர்.

Related Tags :
Next Story