சினிமா தியேட்டருக்கு வெளியே நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்களின் சக்கரங்களை திருடிய 3 பேர் கைது; கஞ்சா போதையில் திருடியது விசாரணையில் அம்பலம்
வில்லியனூரில் சினிமா தியேட்டர் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிள்களின் சக்கரங்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கஞ்சா போதையில் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.
வில்லியனூர்,
கடந்த சில நாட்களுக்கு முன்பு வில்லியனூரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் இரவுக்காட்சி சினிமா பார்க்க சென்ற சிலர் தங்களுடைய மோட்டார் சைக்கிள்களை தியேட்டருக்கு வெளியே ரோடு ஓரத்தில் நிறுத்திவிட்டு சென்றனர். சினிமா காட்சி முடிந்து அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள்களின் சக்கரங்களை யாரோ மர்ம மனிதர்கள் கழட்டி எடுத்து திருடிச் சென்றிருப்பது தெரிய வந்தது. அதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ரங்கநாதன் உத்தரவின்பேரில் வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலு, சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 3 பேர் சேர்ந்து மோட்டார் சைக்கிள்களின் சக்கரங்களை திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அவர்கள் வில்லியனூர் சாமியார் தோப்பு பகுதியைச் சேர்ந்த காண்டீபன் (வயது 41), தமிழரசன் (24) மற்றும் ராஜேஷ் (24) ஆகிய 3 பேர் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கைதான காண்டீபன் கஞ்சா வியாபாரி என்பதும், அவரும் அவருடைய கூட்டாளிகள் தமிழரசன், ராஜேஷ் ஆகியோர் கஞ்சா போதையில் மோட்டார் சைக்கிள்களின் சக்கரங்களை திருடியதும் தெரிய வந்தது. மேலும் அவர்கள் திருடிய மோட்டார் சைக்கிள்களின் சக்கரங்கள் மீட்கப்பட்டன.
இந்த நிலையில் கைதான கஞ்சா வியாபாரி காண்டீபன் வீட்டில் நேற்று போலீசார் மோப்ப நாய் சகிதம் சென்று சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் கஞ்சா எதுவும் சிக்கவில்லை.

Related Tags :
Next Story