ஆபாச படம் எடுத்து துணை நடிகையை மிரட்டிய நடிகர் கைது


ஆபாச படம் எடுத்து துணை நடிகையை மிரட்டிய நடிகர் கைது
x
தினத்தந்தி 29 Sept 2019 5:00 AM IST (Updated: 29 Sept 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

ஆபாச படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டுவதாக துணை நடிகை அளித்த புகாரில் துணை நடிகரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை வடபழனி ஆற்காடு சாலையை சேர்ந்தவர் ஜெனிபர்(வயது 24). துணை நடிகையான இவர், சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்கள், குறும்படங்களில் நடித்து வருகிறார். இவர், திருவல்லிக்கேணியை சேர்ந்த துணை நடிகர் பக்ருதீன் என்பவர் தன்னை ஆபாசமாக படம் எடுத்து பணம் கேட்டும், எனது தாயாரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதற்கு துணை நடிகர் பக்ருதின், ஜெனிபர் என்னிடமும், எனது நண்பர்களிடமும் லட்சக்கணக்கில் கடன் வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வந்தார். அந்த பணத்தை திருப்பிக்கேட்டதற்கு தன் மீது பொய் புகார் அளித்து இருப்பதாக தெரிவித்தார்.

இருவரும் ஒருவர் மீது ஒருவர் தனித்தனியாக போலீஸ் நிலையங்களில் புகார் செய்து இருந்தனர்.

இதுகுறித்து வடபழனி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி விசாரணை மேற்கொண்டார். அதில் பக்ருதீன், துணை நடிகை ஜெனிபரை ஆபாச படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டியது உறுதியானது.

இதையடுத்து நடிகர் பக்ருதீன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story