தஞ்சையில் சமுதாய வளைகாப்பு விழா 320 கர்ப்பிணிகள் பங்கேற்பு


தஞ்சையில் சமுதாய வளைகாப்பு விழா 320 கர்ப்பிணிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 29 Sept 2019 4:30 AM IST (Updated: 29 Sept 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 320 கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா தஞ்சையில் உள்ள தீர்க்க சுமங்கலி மகாலில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

இதில் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் சுரே‌‌ஷ், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், துணைத்தலைவர் ரமே‌‌ஷ், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத்தலைவர் வக்கீல் சரவணன், அச்சக கூட்டுறவு சங்க தலைவர் புண்ணியமூர்த்தி, மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், முன்னாள் ஊராட்சிக்குழு தலைவி அமுதாரவிச்சந்திரன், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

320 கர்ப்பிணிகள்

இந்த சமுதாய வளைகாப்பு விழாவில் 320 கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு வளையல், புடவை உள்ளிட்டவை வழங்கப்பட்டன. பின்னர் கர்ப்பிணிகளுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டன. முன்னதாக திட்ட அலுவலர் பிலோமினாசாந்தி வரவேற்றார். முடிவில் திட்ட அலுவலர் ராணி நன்றி கூறினார்.

Next Story