கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க எதிர்ப்பு: திருக்கோவிலூரில் கடையடைப்பு போராட்டம்


கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்க எதிர்ப்பு: திருக்கோவிலூரில் கடையடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 28 Sep 2019 11:00 PM GMT (Updated: 2019-09-29T01:27:04+05:30)

திருக்கோவிலூரை புதிதாக உருவாக உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத் துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து திருக் கோவிலூரில் கடை யடைப்பு போராட்டம் நடைபெற்றது.

திருக்கோவிலூர்,

விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் பகுதி இருந்து வருகிறது. இந்த நிலையில் விழுப்புரத்தை இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக் கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக செயல்பட தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதில் திருக்கோவிலூர் பகுதியை புதிதாக உருவாக்கப்பட உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின் றனர்.

இது குறித்து பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், எங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நாங்கள் விழுப்புரம் சென்று வருவதுதான் எளிதாக இருக்கிறது. எனவே திருக் கோவிலூரை தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்திலேயே செயல்பட வைக்க வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்கக்கூடாது என்று தெரிவித்து இருந்தனர்.

இருப்பினும் திருக் கோவிலூரை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வணிகர் சங்கம் சார்பில் திருக்கோவிலூர் நகரில் நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பெரும்பாலான கடைகள் அடைக் கப்பட்டிருந்தன. இதன் காரணமாக திருக்கோவிலூரில் உள்ள சாலைகளில் வழக்கத்தை விட மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது. இருப்பினும் மருந்துகடைகள், பூக்கடைகள் மற்றும் டீக்கடைகள் திறந்து இருந்தன. பஸ்கள் வழக்கம்போல் ஓடின. போராட்டத்தின் போது அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே திருக் கோவிலூர் பஸ் நிலையம் அருகே தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர தி.மு.க. செயலாளர் கோபிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் தங்கம், பிரபு, சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, த.மு.மு.க. மாவட்ட செயலாளர் பசல்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் குணா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் எம்.எல்.ஏ.வுமான பொன்முடி, விழுப்புரம் தொகுதி எம்.பி. துரை.ரவிக்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு திருக்கோவிலூர் பகுதியை கள்ளக்குறிச்சி மாவட் டத்துடன் இணை க்கக்கூடாது என்றும், தற்போது உள்ளதுபோல் திருக் கோவிலூர் விழுப்புரம் மாவட்டத்திலேயே தொ டர்ந்து நீடிக்கவேண்டும் என்றும் வலிறுத்தி பேசினார்கள்.

இதில் தி.மு.க. மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் அன்பு, வக்கீல் கார்த்திக், ஒன்றிய துணை செயலாளர் எம்.கே.சங்கர், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் சரவணன், அண்ணாதுரை, கோவிந்தன், முரளி, சக்தி, வெங்கட், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வி.முருகன், நகர தலைவர் கதிர்வேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சிவா, ம.தி.மு.க. நிர்வாகி சேகர், வணிகர் சங்க நிர்வாகிகள் சீனுவாசன், ராஜா, வாசன் உள்பட தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள், வணிகர் சங்கத்தினர் கலந்து கொண்டனர். முடிவில் தகவல்தொழில்நுட்ப நிர்வாகி நாராயணமூர்த்தி நன்றி கூறினார்.

Next Story