தந்தை திட்டியதால் விஷம் குடித்து பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை


தந்தை திட்டியதால் விஷம் குடித்து பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை
x
தினத்தந்தி 30 Sept 2019 3:45 AM IST (Updated: 30 Sept 2019 12:36 AM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளி அருகே தந்தை திட்டியதால் விஷம் குடித்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே ஒன்பத்துவேலி தச்சன்சந்து பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. வேன் டிரைவர். இவருடைய மகன் சாமிவேல்குமரன் (வயது21). இவர் பூதலூர் அருகில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் படித்து வந்தார். சாமிவேல்குமரன் கடந்த சில நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் வளப்பகுடி செட்டித்தோப்பு பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டுக்கு சென்று விட்டார்.

சாவு

இதனால் பாலாஜி தனது மகனை ஏன் கல்லூரிக்கு செல்லவில்லை? என்று கேட்டு திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சாமிவேல்குமரன் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை(விஷம்) எடுத்து குடித்து விட்டார். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாமிவேல் குமரன் உயிரிழந்தார். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story