கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை; வாலிபர் கைது


கழுத்தை நெரித்து மூதாட்டி கொலை; வாலிபர் கைது
x
தினத்தந்தி 30 Sept 2019 3:30 AM IST (Updated: 30 Sept 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

மூதாட்டியை கழுத்தை நெரித்துக்கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பூர்,

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 4-வது பிளாக்கை சேர்ந்தவர் விமலா (வயது 68). இவருக்கு 2 மகன், 2 மகள்கள். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். வீட்டில் தனியாக வசித்து வந்த மூதாட்டி விமலா, கடந்த 4-ந்தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விமலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில், மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிந்தது.

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சுதாகர் (34) என்பவர்தான் மூதாட்டியை கொலை செய்தது தெரிந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த சுதாகர், வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி விமலாவை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அப்போது கூச்சலிட்டதால் ஆத்திரத்தில் விமலாவின் கழுத்தை நெரித்துக்கொன்றதாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். சுதாகர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story