காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 497 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது என கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.
புதுக்கோட்டை,
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2-ந் தேதி காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 497 கிராம ஊராட்சிகளில் கிராம சபைகூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், ஊரக பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், குளங்கள், ஊரணிகள் போன்ற நீர்நிலைகளின் கொள்ள ளவினை அதிகரிக்கும் பொருட்டு சீரமைத்தல், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
சுகாதார விழிப்புணர்வு போட்டிகள்
மேலும் ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம் ஊட்டச்சத்து இயக்கம் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், சுகாதார உறுதி மொழியை எடுத்து கொள்ளுதல் மற்றும் கழிப்பறை கட்டி பயன்படுத்தும் பயனாளிகளுக்கு பாராட்டு தெரிவித்தல், திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள், தூய்மையே சேவை இயக்கம், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்தல், பள்ளி கழிப்பறைகள் மற்றும் அங்கன்வாடி மைய கழிப்பறைகள் மற்றும் பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், நீர்நிலை மாசுபடுவதை தடுக்க செயல்திட்டம் வகுத்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல், ஜல் சக்தி அபியான், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் (ஊரகம்) உள்ளிட்ட பொருட்கள் விவாதிக்கப்பட உள்ளன.
மேற்குறிப்பிட்டு உள்ள அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டு பயன் பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிக அளவில் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story