இரவு நேரங்களில் குளித்தலை நகருக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்லக்கோரி மனு


இரவு நேரங்களில் குளித்தலை நகருக்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்லக்கோரி மனு
x
தினத்தந்தி 30 Sept 2019 4:15 AM IST (Updated: 30 Sept 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பினர் நேற்று குளித்தலை கிளை அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் மனு ஒன்று கொடுத்தனர்.

குளித்தலை,

குளித்தலை பகுதி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டமைப்பினர் நேற்று குளித்தலை கிளை அரசு போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் மனு ஒன்று கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

கரூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குளித்தலையிலிருந்து மற்ற நகர மற்றும் கிராமப்பகுதிகளுக்கு செல்ல குளித்தலை பகுதி முக்கிய சாலை சந்திப்பாக உள்ளது.

தினந்தோறும் பகல் நேரங்களில் குளித்தலை வழியாக செல்லும் அனைத்து பஸ்களும், குளித்தலை பஸ்நிலையம் வந்து பயணிகளை ஏற்றி, இறக்கிச்செல்கிறது. ஆனால் இரவு நேரங்களில் திருச்சி, கரூர், கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் உள்ள பஸ்நிலையங்களில் இருந்து குளித்தலைக்கு வரும் பயணிகளை பஸ்சில் ஏறவிடாமல் பஸ் கண்டக்டர்கள், டிரைவர்கள் தடுக்கின்றனர். இதனால் இரவு நேரங்களில் குளித்தலை பஸ்நிலையம் வழியாக வராத அனைத்து பஸ்களையும், குளித்தலை புறவழிச்சாலையில் உள்ள பெரியபாலம் பரிசல்துறை சாலை, கடம்பவனேசுவரர் கோவில் ஆகிய பகுதிகளில் வருகிற 12-ந்தேதி முதல் தினந்தோறும் இரவு 10 மணிக்கு மேல் அதிகாலை 5 மணிவரை வரும் பஸ்களை சிறைபிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

எனவே திருச்சி, கரூர் உள்ளிட்ட பஸ்நிலையங்களில் குளித்தலை வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் 24 மணிநேரமும் குளித்தலை பஸ்நிலையம் வழியாக சென்று பயணிகள் ஏற்றி, இறக்கி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Next Story