மராட்டிய மாநில சட்டசபை தேர்தல்; 51 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு - தாராவி - வர்ஷா கெய்க்வாட், சயான் கோலிவாடா - கணேஷ் குமார்
மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் 51 தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தாராவி தொகுதியில் வர்ஷா கெய்க்வாட்டும், சயான் கோலிவாடா தொகுதியில் தமிழரான கணேஷ்குமாரும் போட்டியிடுகிறார்கள்.
மும்பை,
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம்(அக்டோபர்) 21-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ராஜூசெட்டி தலைமையிலான சுவாபிமானி சேட்காரி சங்கட்னா போன்ற சிறிய கட்சிகளும் இடம்பெற்று உள்ளன.
முதலில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா 125 தொகுதிகளில் போட்டியிடுவதாக கூறப்பட்டது. தற்போது காங்கிரஸ் கட்சி 125-க்கும் அதிகமான தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இந்த தகவலை அக்கட்சியின் மாநில தலைவர் பாலாசாகிப் தோரட் கூறியுள்ளார்.
இந்தநிலையில் நேற்று காங்கிரஸ் தலைமை, மராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 51 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
1.அக்கல்குவா- வக்கீல் பாட்வி.
2.சகாடா - பத்மாகர் விஜய் சிங் வால்வி.
3.நவாப்பூர் - சிரி சுருப்சிங் நாயக்.
4.ராவர் - சிரிஷ் மதுக்கர்ராவ் சவுத்ரி.
5.புல்தானா - ஹர்சவர்தன் வசந்த்ராவ் சக்பால்.
6.மேகர் - ஆனந்த் சக்காராம் வாங்கடே.
7.ரிசோத் - அமித் சுபாஷ்ராவ் சானக்,
8.தமன்காவ் ரெயில்வே- விரேந்திர வால்மிகி ராவ் ஜக்தாப்.
9.தேவ்சா- யசோமதி தாக்கூர்.
10.அர்வி - அமர் சரத்காலே,
11.தேவ்லி- ரஞ்சித் பிரதாப் காம்ளே.
12.சாவ்னர் - சுனில் கேதார்.
13.நாக்பூர் வடக்கு - நிதின் ராவுத்.
14.பாராமதி - விஜய் நாம்தேவ் வடேடிவார்.
15.சிமுர் - சதீஸ் மனோகர்.
16.வரோரா - பிரதிபா தனோர்கர்.
17.யவத்மால் - அனில் பாலாசாகிப்,
18.போகர் - அசோக் சவான்.
19.நாந்தெட் வடக்கு - டி.பி. சாவந்த்.
20.நைகாவ்- வசந்த்ராவ் சவான்.
21.தெக்லுர்- ராவ்சாகிப் ஜெயவந்த்.
22.கலாம்நுசி - சந்தோஷ் தர்பே.
23.பத்ரி-சுரேஷ் அம்பாதாஸ்.
24.புலாம்புரி- கல்யாண் காலே.
25.மத்திய மாலேகாவ் - சேக் ஆசிப் ரசீத்.
26.அம்பர்நாத் - ரோகித் சந்திரகாந்த் சால்வே.
27.மிராபயந்தர்- செய்யது முசாபர் ஹூசேன்.
மும்பை தொகுதிகள்
28.பாண்டுப் மேற்கு - சுரேஷ் ஹரிஷ்சந்திர கோபர்கர்.
29.அந்தேரி மேற்கு - அசோக் ஜாதவ்.
30.சாந்திவிலி- முகமது ஆரிப் நசீம்கான்.
31.செம்பூர் - சந்திரகாந்த் தாமோதர்.
32.பாந்திரா கிழக்கு - சியான் சியானுதின் சித்திக்.
33.தாராவி - வர்ஷா கெய்க்வாட்.
34.சயான் கோலிவாடா - கணேஷ் குமார்.
35.மும்பா தேவி- அமின் பாட்டீல்
36.கொலபா- அசோக் ஜகதாப்.
37.மகாடு - மானிக் மோதிராம் ஜகதாப்.
38.புரந்தர்- சஞ்சய் சந்திரகாந்த்,
39.போர் - சங்காராம் ஆனந்த்ராவ்,
40.புனே கன்டோன்மென்ட் - ரமேஷ் ஆனந்த்ராவ்,
41.சங்கம்னர்- விஜய் பாலாசாகேப் தோரட்,
42.லாத்தூர் நகரம் - அமித் விலாஸ்ராவ்,
43.நிலங்கா - அசோக் சிவாஜிராவ் பாட்டீல்,
44.ஆவ்சா - மாதவ்ராவ் பாட்டீல்,
45.துலிஜாபுர் - மதுக்கர்ராவ் தேவ்ராம்,
46.சோலாப்பூர் மத்திய நகரம் - பிரனிதி சுஷில்குமார் ஷிண்டே,
47.சோலாப்பூர் தெற்கு- மவுலாபி பாசுமியா செய்யது,
48.கோலாப்பூர் தெற்கு - ருத்துராஜ் சஞ்சய் பாட்டீல்,
49.கர்விர்- பி.என். பாட்டீல்,
50.பாலுஸ்-காடேகாவ் - விஸ்வஜித் படாங்ராவ் கதம்,
51.ஜாத் - விக்ரம் பாலாசாகிப் சாவந்த்.
2 தமிழர்கள் போட்டி?
இதில், சயான் கோலிவாடா தொகுதியில் போட்டியிடும் கணேஷ்குமார் தமிழர் ஆவார். இவர் தற்போது மும்பை இளைஞர் காங்கிரஸ் தலைவராக உள்ளார். தற்போது சயான் கோலிவாடா தொகுதியில் தமிழர் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.வாக உள்ளார். பா.ஜனதா சார்பில் அவரே அந்த தொகுதியில் மீண்டும் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே வரஇருக்கும் சட்டசபை தேர்தலில் சயான்கோலிவாடா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கணேஷ்குமார், பா.ஜனதா சார்பில் கேப்டன் தமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ. என 2 தமிழர்கள் போட்டியிடுவார்கள் என தெரிகிறது.
இதேபோல முன்னாள் முதல்- மந்திரி அசோக் சவான், நாந்தெட் மாவட்டத்தில் உள்ள போகர் தொகுதியில் போட்டியிடுகிறார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் தாராவியில் வர்ஷா கெய்க்வாட்டுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே அதே தொகுதியில் 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் மந்திரி சுஷில்குமார் ஷிண்டேவின் மகள் பிரனிதி மீண்டும் சோலாப்பூர் மத்திய நகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கட்சி முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதன் மூலம் மராட்டிய தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. விரைவில் அனைத்து கட்சிகளும் முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story