மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே, மின்சாரம் தாக்கி பெண் பலி + "||" + Near Hosur, electricity hit Woman kills

ஓசூர் அருகே, மின்சாரம் தாக்கி பெண் பலி

ஓசூர் அருகே, மின்சாரம் தாக்கி பெண் பலி
ஓசூர் அருகே இரும்பு கம்பியை தொட்ட போது மின்சாரம் தாக்கி பெண் பலியானார்.
ஓசூர்,

ஓசூர் மூக்கண்டப்பள்ளி தேசிங் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வள்ளி (வயது 27). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வள்ளி, வீட்டு அருகே இருந்த இரும்பு கம்பியை தொட்டுள்ளார்.

அப்போது திடீரென அவர் மீது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் வள்ளியை மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று வள்ளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மின்சாரம் தாக்கி பெண் பலியானது தொடர்பாக சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடே‌‌ஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்திகள்

1. போலீஸ் வாகனம் மோதி விபத்து: மேலும் ஒரு பெண் பரிதாப சாவு
கடையநல்லூர் அருகே போலீஸ் வாகனம் மோதிய விபத்தில் மேலும் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
2. கள்ளக்குறிச்சியில் போலீசார் வாகன சோதனை: மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு
கள்ளக்குறிச்சியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. கோவையில் பரிதாபம்: மின்சாரம் தாக்கி மூதாட்டி உள்பட 2 பேர் சாவு
கோவையில் மின்சாரம் தாக்கி மூதாட்டி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
4. விழுப்புரம் அருகே, மின்னல் தாக்கி பெண் பலி - 2 பேர் படுகாயம்
விழுப்புரம் அருகே மின்னல் தாக்கியதில் பெண் பலியானார். 2 பேர் பலத்த காயமடைந்தனர்.
5. சுங்குவார்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி
சுங்குவார்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியானார்.