சிங்காரப்பேட்டையில் குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்
சிங்காரப்பேட்டையில் ச குடிநீர் வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கல்லாவி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை ஊராட்சியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றி தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆழ்துைள கிணற்றில் தண்ணீர் இல்லாததால் சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய முடியவில்லை. இந்தநிலையில் ஆழ்துளை கிணற்றை ஆழப்படுத்தி சீராக குடிநீர் வினியோகம் செய்யக்கோரி சிங்காரப்பேட்டையில் திருவண்ணாமலை- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் கூறுகையில், சிங்காரப்பேட்டை ஊராட்சியில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் குறைந்ததாலும், மோட்டார்கள் பழுதடைந்துள்ளதாலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. புதிதாக மோட்டார் வாங்கி பொதுமக்களுக்கு குடிநீர் சீராக வழங்கப்படும் அவர் கூறினார்.
Related Tags :
Next Story