கடலூர் அருகே, ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவியிடம் உல்லாசம் - திருமணத்திற்கு மறுத்த காதலன் கைது
கடலூர் அருகே ஆசைவார்த்தை கூறி மாணவியிடம் உல்லாசம் அனுபவித்துவிட்டு அவரை திருமணம் செய்ய மறுத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
கடலூர் முதுநகர் அருகே உள்ள தொண்டமாநத்தம் கரைமேடு பகுதியை சேர்ந்தவர் புதுவண்ணன். இவருடைய மகன் தமிழ்செல்வன்(வயது 22). என்ஜினீயரிங் படித்து முடித்துள்ளார். இவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் 19 வயது மாணவியை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். காதல்ஜோடி இருவரும் சினிமா, பீச் என பல்வேறு இடங்களுக்கு சென்று வந்தனர். அப்போது தமிழ்செல்வன் மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரிடம் உல்லாசம் அனுபவித்து வந்தார்.
சிலநாட்களுக்கு பிறகு மாணவி கர்ப்பம் அடைந்தார். பின்னர் இதுபற்றி தனது காதலனிடம் எடுத்துக்கூறி தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினார். இதற்கு கர்ப்பத்தை கலைத்துவிட்டு வந்தால் திருமணம் செய்துகொள் வதாக தமிழ்செல்வன் கூறி னார். இதை உண்மை என்று நம்பிய அந்த மாணவி மாத்திரைகளை தின்று கர்ப்பத்தை கலைத்தார். இதன் பிறகு அவர் தமிழ்செல்வனை சந்தித்து தான் கர்ப்பத்தை கலைத்துவிட்ட விஷயத்தை எடுத்துக்கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறினார். இதன் பிறகும் அவர் திருமணம்செய்ய மறுத்துவிட்டார்.
இதனால் மனமுடைந்த மாணவி கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி வழக்கு பதிவு செய்து என்ஜினீயர் தமிழ்செல்வனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story