அழைப்பு உங்களுக்குத்தான்
பல்வேறு நிறுவனங்களில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
நபார்டு வங்கி
விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி சுருக்கமாக நபார்டு எனப் படுகிறது. தற்போது இந்த வங்கியில் டெவலப்மென்ட் அசிஸ்டன்டன்ட் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 91 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்தி-இங்கிலிஷ் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 9 இடங்களும், இதர பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு 82 இடங்களும் உள்ளன. விண்ணப்பதாரர்கள் 1-9-2019-ந் தேதியில் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி அக்டோபர் 2-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விரிவான விவரங்களை அறிந்து கொள்ள https://www.nabard.org/ என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.
யுரேனியம் நிறுவனம்
ஜார்க்கண்ட் மாநிலம் ஜடுகுடாவில் அணுமின் தாதுவான யுரேனியம் தாது கழக நிறுவனம் செயல்படுகிறது. யூசில் (UCIL) என அழைக்கப்படும் இந்த நிறுவனத்தில் ஐ.டி.ஐ. படித்தவர்களை அப்ரண்டிஸ் பயிற்சிப்பணியில் சேர்க்க அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 247 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பிட்டர், எலக்ட்ரீசியன், வெல்டர், டர்னர், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக், டீசல் மெக்கானிக், கார்பெண்டர், பிளம்பர் போன்ற பிரிவில் பணிச்சேர்க்கை நடக்கிறது. 30-9-2019-ந் தேதியில் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், ஐ.டி.ஐ. படித்திருக்க வேண்டும். www.uraniumcorp.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் விரைவு தபாலில் குறிப்பிட்ட முகவரியை அறிவிப்பில் இருந்து 20 நாட்களுக்குள் சென்றடைய வேண்டும். அத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் இணைக்கப்பட வேண்டும். இது பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 25-ல் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் பார்க்கலாம்.
நீர்மின் நிலையம்
டி.எச்.டி.சி. இந்தியா எனப்படும் இந்திய நீர்மின் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிகளுக்கு 100 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எலக்ட்ரீசியன், பிட்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக், வயர்மேன், வெல்டர், புட் புரொடக்சன், செக்ரட்டேரியல் அசிஸ்டன்ட், மெக்கானிக் உள்ளிட்ட பிரிவில் பணிகள் உள்ளன. 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை www.thdc.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் அக்டோபர் 20-ந் தேதியாகும்.
எரிபொருள் நிறுவனம்
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தின் துணை நிறுவனமான எச்.பி.சி.எல். பயோபியூல்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் தற்போது ஜெனரல் மேனேஜர், கிளார்க், பார்மசிஸ்ட், வெல்டர், லேப் கெமிஸ்ட் உள்ளிட்ட பணி களுக்கு 105 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ என்ஜினீயரிங், பி.இ. பி.டெக் பலதரப்பட்ட படிப்பு படித்தவர்களுக்கும் வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அக்டோபர் 7-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை http://www.hpclbiofuels.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
உர நிறுவனம்
தேசிய உர நிறுவனத்தில் (என்.எப்.எல்.) துணை நிறுவனமான ஆர்.எப்.சி.எல். உரம் மற்றும் வேதி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பொது மேலாளர், உதவி பொது மேலாளர், மேலாளர், முதுநிலை மேலாளர் உள்ளிட்ட பணிகளுக்கு மொத்தம் 84 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். கெமிக்கல், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், சிவில், சேப்டி, ஐ.டி.,எச்.ஆர்., மெட்டீரியல் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. பணியிடங்கள் சார்ந்த முதுநிலை தொழில்நுட்ப படிப்புகள், அறிவியல் படிப்புகளை படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. பட்டதாரிகளுக்கும், டிப்ளமோ படித்தவர்களுக்கும் சில பணியிடங்கள் உள்ளன. இது பற்றிய விவரங்களை https://www.nationalfertilizers.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசிநாள் அக்டோபர் 6-ந் தேதியாகும்.
ரிட்ஸ்
இந்திய ரெயில்வே நிறுவனத்தின் துணை நிறுவனங்களில் ஒன்று ரிட்ஸ். இது ரெயில்வே கட்டமைப்பு பணிகளை கவனிக்கிறது. தற்போது இந்த நிறுவனத்தில் சைட் இன்ஸ்பெக்டர் (சிவில், இ அண்ட் எம்) மற்றும் கேட் ஆபரேட்டர் போன்ற பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. சிவில், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், புரொடக்சன், ஆட்டோகேட் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை https://rites.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு வருகிற 10-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
Related Tags :
Next Story