இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் - அமைச்சர் பாஸ்கரன் பேட்டி


இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் - அமைச்சர் பாஸ்கரன் பேட்டி
x
தினத்தந்தி 1 Oct 2019 4:00 AM IST (Updated: 1 Oct 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும் என்று அமைச்சர் பாஸ்கரன் கூறினார்.

சிவகங்கை,

சிவகங்கை கலெக்டர் அலுவலகம் அருகில் அமைச்சர் தொகுதி நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நிழற்குடை திறப்பு விழா கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. அதை அமைச்சர் பாஸ்கரன் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இதில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன், கூட்டுறவு அச்சக தலைவர் சசிகுமார், நகராட்சி ஆணையாளர் அயூப்கான், கூட்டுறவு விற்பனை பண்டகசாலை தலைவர் ஆனந்தன், வக்கீல் ராஜா, கூட்டுறவு வங்கி இயக்குனர்கள் கோபி, மானாகுடி சந்திரன், பல்ராமன், காஜாமொய்தீன், கோட்டையன், அ.தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் தேவதாஸ் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக அரசு குடிமராமத்து பணிகளில் ஏரி, குளம் ஆகியவற்றில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில தற்போது பெய்த மழையால் கண்மாய், குளங்கள் நிரம்பி வருகின்றன. நடைபெற உள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

நமது கட்சியின் வேட்பாளர்கள் 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெறுவார்கள். அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்று தினகரன் கட்சியில் சேர்ந்தவர்கள் 99 சதவீதம் பேர் மீண்டும் தாய் கழகத்தில் இனைந்துவிட்டனர். இன்னும் இணைந்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story