அனுமதியின்றி சவுடு மண் ஏற்றிய டிராக்டர் பறிமுதல்; 2 பேர் கைது


அனுமதியின்றி சவுடு மண் ஏற்றிய டிராக்டர் பறிமுதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Oct 2019 3:45 AM IST (Updated: 1 Oct 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம் அருகே அனுமதியின்றி சவுடு மண் ஏற்றியடிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 2 பேரை கைது செய்தனர்.

குத்தாலம்,

குத்தாலம் அருகே மேலபருத்திக்குடி கிராமத்தில் அனுமதியின்றி தனியார் இடத்தில் சவுடு மண் எடுப்பதாக பாலையூர் போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் மேற்கண்ட இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது. அங்கு அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் மணிகண்டன் (வயது 31), நாகம்பாடி குடியானத்தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராகுல் (24) ஆகியோர் அனுமதியின்றி டிராக்டரில் சவுடு மண் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது.

2 பேர் கைது

இதனை தொடர்ந்து போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், ராகுல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Next Story