கிரு‌‌ஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது


கிரு‌‌ஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் - கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 1 Oct 2019 4:00 AM IST (Updated: 1 Oct 2019 2:54 AM IST)
t-max-icont-min-icon

கிரு‌‌ஷ்ணகிரியில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடந்தது.

கிரு‌‌ஷ்ணகிரி, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பொதுமக்கள் குடிநீர் வசதி, மின்சார வசதி, கல்வி உதவித்தொகை, ஓய்வூதிய தொகை, இலவச தையல் எந்திரம், சலவை பெட்டி, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 326 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.

மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர் பிரபாகர், அதை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து கிரு‌‌ஷ்ணகிரி மாவட்ட முஸ்லீம் உதவும் சங்கத்தின் சார்பாக ஒரு நபருக்கு ரூ.4,000 வீதம் 130 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ. 5 லட்சத்து 49 ஆயிரத்து 480 மதிப்பிலான நலத்திட்ட உதவித்தொகைக்கான காசோலைகளை கலெக்டர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியின் போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, தனித் துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) குணசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நலத் துறை அலுவலர் சேதுராமலிங்கம், மாவட்ட வழங்கல் அலுவலர் கனகராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர் பா‌ஷா, உதவி ஆணையர் (ஆயம்) முரளி, மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.

Next Story