மாவட்ட செய்திகள்

தாய், கள்ளக்காதலனால் கொன்று புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை + "||" + Mother, buried and killed by counterfeiters Postmortem examination of baby's body

தாய், கள்ளக்காதலனால் கொன்று புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

தாய், கள்ளக்காதலனால் கொன்று புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை
ஆரணி அருகே தாய், கள்ளக்காதலனால் கொன்று புதைக்கப்பட்ட குழந்தையின் உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
ஆரணி, 

ஆரணியை அடுத்த சேவூர் காலனி பகுதியை சேர்ந்தவர் குமார் என்கிற கன்றாயன். அவருடைய மனைவி சோலையம்மாள் (வயது 35). இவர்களுக்கு ஒரு மகளும், 3 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் சோலையம்மாள் மீண்டும் கர்ப்பமானார். கடந்த 14-ந் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 15-ந் தேதி பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் 16-ந் தேதி மருத்துவமனையில் இருந்த சோலையம்மாள் பச்சிளம் குழந்தையுடன் மாயமானார். இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் குமாரின் அண்ணன் பாபுவுக்கும், சோலையம்மாளுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனால் பாபுவையும், சோலையம்மாளையும் போலீசார் வலைவீசி தேடி வந்த நிலையில் சேவூர் கிராம நிர்வாக அலுவலரிடம் பாபுவும், சோலையம்மாளும் சரண் அடைந்தனர். அப்போது அவர்கள், கள்ளக்காதல் மூலம் குழந்தை பிறந்ததால் சேவூர் சுடுகாட்டின் அருகே தனியார் நிலத்தில் கொன்று புதைத்து விட்டதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சரவணன், அவர்கள் 2 பேரையும் ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தார். இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் நேற்று பச்சிளம் குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை சோலையம்மாள், கள்ளக்காதலன் பாபு ஆகியோர் அடையாளம் காட்டினர். பின்னர் ஆரணி வட்ட வழங்கல் அலுவலர் பாலாஜி, வருவாய் ஆய்வாளர் வசந்தி ஆகியோர் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஆரணி அரசு மருத்துவமனை டாக்டர் கமலக்கண்ணன் அதே இடத்தில் பிரேத பரிசோதனை நடத்தினார். பின்னர் குழந்தையின் உடல் குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அவரும், அவரது உறவினர்களும் குழந்தையை சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்று சடங்குகள் செய்து புதைத்தனர்.

பின்னர் இருவரையும் போலீசார் ஆரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய பெண்கள் சிறையில் சோலையம்மாளையும், ஆண்கள் சிறையில் பாபுவையும் அடைத்தனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. வேலை கேட்பது போல் நடித்து பூட்டிய வீடுகளில் கைவரிசை காட்டிய தாய், மகன் கைது
வளசரவாக்கத்தில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த தாய், மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
2. வீட்டை தானமாக எழுதி வாங்கிவிட்டு, தாயை பராமரிக்காத மகளின் பெயரில் இருந்த பத்திர பதிவை ரத்து செய்ய நடவடிக்கை
வீட்டை தானமாக எழுதி வாங்கி விட்டு தாயை பராமரிக்காத மகளின் பெயரில் இருந்த பத்திர பதிவை ரத்து செய்ய சார் பதிவாளருக்கு சப்-கலெக்டர் பரிந்துரை செய்தார்.
3. 2 வயது குழந்தைக்கு சூடு வைத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தாய், கள்ளக்காதலன் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைப்பு
வேலூரில் 2 வயது பெண் குழந்தையின் உடலில் சூடு வைத்து, சித்ரவதை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குழந்தையின் தாய் மற்றும் கள்ளக்காதலன் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
4. பேரம்பாக்கம் அருகே தாய், மகளை தாக்கிய 3 பேர் கைது
பேரம்பாக்கம் அருகே தாய், மகளை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
5. சாமி ஊர்வலத்தின்போது வாகனத்தை ஓரமாக நிறுத்த சொன்ன தாய், மகனுக்கு கத்திக்குத்து; 3 பேர் கைது
சாமி ஊர்வலத்தின் போது வாகனத்தை ஓரமாக நிறுத்த சொன்ன தாய், மகனுக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.