குரூப்-2 பாடத்திட்டம் மாற்றப்பட்டதை கண்டித்து போராட்டம்


குரூப்-2 பாடத்திட்டம் மாற்றப்பட்டதை கண்டித்து போராட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2019 3:45 AM IST (Updated: 1 Oct 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

குரூப்-2 பாடத்திட்டம் மாற்றப்பட்டத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடந்தது.

மதுரை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் அரசு பணிகளுக்கு போட்டி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் குரூப்-2 தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பழைய பாடத்திட்டத்தின்படி தான் தேர்வு நடத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். முன்னதாக அவர்கள் அனைவரும் மாநகராட்சி அண்ணா மாளிகையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர்.

அப்போது அவர்கள் புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய பாடத்திட்டத்தால் தனியார் பயிற்சி பள்ளிகள் தான் பலன் அடையும். கிராமப்புற மாணவர்கள் பாதிப்பு அடைவார்கள் என்ற வாசகத்துடன் கையில் பதாகை வைத்திருந்தனர். இந்த ஊர்வலம் சட்டக்கல்லூரி, காந்தி மியூசியம் வழியாக கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது. பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். பின்னர் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் வழங்கினர்.

Next Story