பொன்னமராவதி, ஆலங்குடி, புதுக்கோட்டையில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பொன்னமராவதி, ஆலங்குடி, புதுக்கோட்டையில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்னமராவதி,
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பஸ் நிலையம் முன்பு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 21 மாத நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்குவது போல் மருத்துவபடி ரூ.ஆயிரம் வழங்க வேண்டும். கிராம உதவியாளர் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பண்டிகை முன்பணம் வழங்க வேண்டும். கிராம உதவியாளருக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் ஆள்வரப்பன், வட்ட செயலாளர் சிதம்பரம், வட்ட பொருளாளர் மோகன், வட்ட துணைத்தலைவர் ராமன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆலங்குடி, புதுக்கோட்டை
இதே கோரிக்கையை வலி யுறுத்தி ஆலங்குடி வட்ட கிளை அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், ஆலங்குடி தாசில்தார் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். கந்தசாமி வரவேற்றார். வட்ட துணை தலைவர் கருப்பையா, செல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் துரை அரங்கசாமி மற்றும் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில், புதுக்கோட்டை திலகர் திடலில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் கருப்பையா தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் மணவாளன், துணை தலைவர் பிரபாகரன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினார்கள். புதுக்கோட்டையில் வீட்டுவரி உயர்த்தப்பட்டு உள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story