இறக்குமதி செய்யப்படும் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய்க்கு அதிகவரி விதிக்க வேண்டும் - சிறு, குறு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
இறக்குமதி செய்யப்படும் பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்க்கு அதிகவரி விதிக்க வேண்டும் என்று சிறு, குறு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு,
தமிழ்நாடு சிறு, குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் நடப்பு பருவத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. விவசாயம் செய்ய விவசாயிகள் ஆர்வம் இல்லாததால் விதைப்பு பணி மந்தமாகவே உள்ளது. இதற்கு காரணம் உரம் மற்றும் பூச்சி மருந்துகள் விலை உயர்வு, கூலி ஆட்கள் பற்றாக்குறை மற்றும் பல மடங்கு கூலி உயர்வு ஆகும். விவசாயத்திற்கு பகல் முழுவதும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.
கடந்த 3 ஆண்டுகளாக கரும்புக்கு விலை உயர்த்தப்படவில்லை. முத்தரப்பு கூட்டமும் நடத்தப்படவில்லை. இதனால் கரும்பு நடவு மிகவும் குறைந்துள்ளது. தனியார் ஆலைகள் அறுவடை செய்த கரும்புக்கு பல மாதங்களாக பணம் வழங்கவில்லை. நடப்பு பருவத்திற்கான கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ.4 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும்.
மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு ஆதார விலையாக ரூ.12 ஆயிரமாக அறிவித்து அரசே கொள்முதல் செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் அரசு தாக்கல் செய்த கால்நடை சம்பந்தமான மசோதாவை திரும்பப்பெற வேண்டும். எண்ணெய் வித்து விவசாயிகளின் நலன் கருதி இறக்குமதியாகும் பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் மீது அதிக வரி விதிக்க வேண்டும். அல்லது இறக்குமதியை தடை செய்ய வேண்டும்.
நிலுவையில் உள்ள பயிர் காப்பீட்டு தொகை மற்றும் மக்காச்சோள பயிருக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதால், ஊராட்சிகள் மூலம் செயல்படுத்தப்படும் 100 நாட்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.

Related Tags :
Next Story