காந்தி ஜெயந்தியையொட்டி 430 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் இன்று நடக்கிறது
திருவாரூர் மாவட்டத்தில் 430 ஊராட்சிகளில் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபை கூட்டம் இன்று நடை பெறுகிறது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியையொட்டி கிராம சபைக் கூட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், குடிமராமத்து பணிகள், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் வாயிலாக பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளின் முன்னேற்றம், பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தல் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
விழிப்புணர்வு போட்டிகள்
மேலும் முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுதல், திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகள் என்ற நிலையை தக்க வைக்கும் நடவடிக்கைகள், தூய்மையே சேவை இயக்கம், பள்ளிகளில் சுகாதார விழிப்புணர்வு போட்டிகள் நடத்துதல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட முன்னேற்றம், ஜல் சக்தி அபியான் இயக்கம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், வறுமை ஒழிப்பு சங்கங்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Related Tags :
Next Story