புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி வேதாரண்யத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்,
வேதாரண்யம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட தலைவர் நடராஜன், மாவட்ட துணை தலைவர் உலகநாதன் ஆகியோர் பேசினர். மாவட்ட துணை தலைவர் ராஜமாணிக்கம், மாவட்ட இணை செயலாளர் வேதரத்தினம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தங்கவேல், வட்ட துணை தலைவர்கள் சுப்பிரமணியன், ராமலிங்கம், வட்ட இணை செயலாளர்கள் சங்கரபாணி, கலீதீர்த்தான், ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் மதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குறைந்த பட்ச ஓய்வூதியம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம ஊழியர்களுக்கு குறைந்த பட்சம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு வழங்குவதுபோல் மாநில அரசு ஓய்வூதியர்களுக்கும் குறைந்த பட்ச ஓய்வூதியம் மற்றும் மருத்துவ படியை வழங்க வேண்டும். அரசானை 56-யை ரத்து செய்து அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் பொருளாளர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story