குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்பட்ட குளங்களை கலெக்டர் ஆய்வு கரையில் மரக்கன்று நட அறிவுறுத்தல்


குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்பட்ட குளங்களை கலெக்டர் ஆய்வு கரையில் மரக்கன்று நட அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 2 Oct 2019 4:15 AM IST (Updated: 2 Oct 2019 1:03 AM IST)
t-max-icont-min-icon

குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்பட்ட குளங்களை கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். அப்போது குளங்களின் கரையில் மரக்கன்று நட அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் ஆறு, ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. ஒரத்தநாடு ஒன்றிய பகுதியில் குடிமராமத்து திட்டத்தில் தூர்வாரப்பட்ட குளங்களை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பருத்திக்கோட்டை ஊராட்சியில் தூர்வாரப்பட்ட புலவன் குளத்தை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் குளத்திற்கான வரத்து வாய்க்கால் அமைந்துள்ள பகுதிகளில் நில அளவை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார்.

மரக்கன்றுகள்

இதேபோல் இதே ஊரில் உள்ள வண்ணான்குளம் தூர்வாரப்பட்டு வருவதை பார்வையிட்ட கலெக்டர், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், குளத்தின் கரைகளை பலப்படுத்தி மரக்கன்று நட வேண்டும் என்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது ஒரத்தநாடு வட்டார வளர்ச்சி அதிகாரி முருகன், ஊரக வளர்ச்சித்துறை உதவி பொறியாளர் முகமது இ‌ஷாக், அரசு மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.

Next Story