மணல் கடத்தலை தடுக்கக்கோரி காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம்


மணல் கடத்தலை தடுக்கக்கோரி காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 1 Oct 2019 11:00 PM GMT (Updated: 1 Oct 2019 7:39 PM GMT)

திருக்காட்டுப்பள்ளியில் மணல் கடத்தலை தடுக்கக்கோரி காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் போராட்டம் அனைத்து கட்சியினர் சார்பில் நடந்தது.

திருக்காட்டுப்பள்ளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, ஆச்சனூர், வடுககுடி, கழுமங்கலம், கோவிலடி, சுக்காம்பார், ஒரத்தூர், துண்டராயன்படுகை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வெண்ணாறு, காவிரி, கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் இருந்து மணல் கடத்தி செல்வது தொடர்ந்து நடக்கிறது.

இதை கண்டித்தும், மணல் கடத்தலை தடுக்கக்கோரியும் திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் உள்ள காந்தி சிலையிடம் மனு கொடுக்கும் நூதன போராட்டம் அனைத்துக்கட்சியினர் சார்பில் நேற்று நடந்தது. இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வக்கீல் ஜீவகுமார் தலைமை தாங்கினார்.

காந்தி சிலையிடம் மனு

பூதலூர் வட்டார கொள்ளிடம் ஆறு பாதுகாப்பு சங்க தலைவர் ராஜேந்திரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் செல்லக்கண்ணு, அ.ம.மு.க. பூதலூர் ஒன்றிய செயலாளர் மதியழகன், பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் காந்தி, திருக்காட்டுப்பள்ளி நகர காங்கிரஸ் தலைவர் கலைச்செல்வன், நகர தி.மு.க. செயலாளர் ஜெயராமன், ம.தி.மு.க. நிர்வாகி முருகானந்தம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு காந்தி சிலையிடம் மனு கொடுத்து கோரிக்கையை வலியுறுத்தி கோ‌‌ஷம் எழுப்பினர்.

Next Story