டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்


டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி மாவட்ட கலெக்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 2 Oct 2019 3:30 AM IST (Updated: 2 Oct 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் நேற்று டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர்,

"டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி " திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு முக்கிய சாலைகள் வழியாக, டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.

இதில், குடும்பநலம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பி.வி.தயாளன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி, திருவள்ளூர் தாசில்தார் பாண்டியராஜன், நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், நகராட்சி சுகாதார பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story