தமிழக-கேரள நதிநீர் பங்கீடு ஒப்பந்தப்படி, மேல்நீரார் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
தமிழக -கேரள நதிநீர் பங்கீடு ஒப்பந்தப்படி மேல் நீரார் அணையி்ல் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
வால்பாறை,
வால்பாறை சின்னக்கல்லார் பகுதியில் உள்ள மேல்நீரார்அணையில் இருந்து தமிழக- கேரள நதிநீர் பங்கீடு ஒப்பந்தப்படி ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் ஜனவரி 31-ந் தேதி வரை கேரள மாநில வனப்பகுதியின் செழிப்பு மற்றும் வனவிலங்குகளின் தேவைக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. அதன்படி நேற்று காலை 8 மணிக்கு வால்பாறை பொதுப்பணித்துறை அதிகாரிகள்,கேரள மாநில விவ சாயத்துறை அதிகாரிகள் முன்னிலையில் மேல்நீரார் அணையின் மதகு திறக்கப்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பரம்பிக்குளம்-ஆழியார் திட்டத்திற்கு பெரிதும் உதவியாக இருந்து வரும் மேல்நீரார் அணைக்கு வரக்கூடிய தண்ணீர் முழுவதும் அணையின் அடிமட்ட மதகு திறக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது.
இவ்வாறு வெளியாகும் தண்ணீர் நீரார் அணையை சென்றடைந்தது. அதன் பின்னர் நீரார்அணையின் ஒரு அடிமட்ட மதகு திறக்கப்பட்டு 164 கனஅடித்தண்ணீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டது என்றனர்.
மேல் நீராறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து குறைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story