எப்போதும் வென்றான் அருகே கன்டெய்னர் லாரி-வேன் மோதல்; 11 பேர் காயம்


எப்போதும் வென்றான் அருகே கன்டெய்னர் லாரி-வேன் மோதல்; 11 பேர் காயம்
x
தினத்தந்தி 2 Oct 2019 3:15 AM IST (Updated: 2 Oct 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

எப்போதும் வென்றான் அருகே கன்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் 11 பேர் காயம் அடைந்தனர்.

ஓட்டப்பிடாரம், 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடை சேர்ந்தவர் சவுந்தரராஜ் (வயது 56). இவர் தனது குடும்பத்துடன் நேற்று முன்தினம் மாலையில் வேனில் புறப்பட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தார். வேனை காசிபாளையத்தை சேர்ந்த யுவராஜ் (29) என்பவர் ஓட்டினார்.

நேற்று அதிகாலையில் மதுரை-தூத்துக்குடி பைபாசில் ஓட்டப்பிடாரம் எப்போதும் வென்றான் பாலம் அருகே வேன் வந்து கொண்டிருந்தது. வேனுக்கு முன்னால் கன்டெய்னர் லாரி சென்றது. அப்போது வேனும், கன்டெய்னர் லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டது. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது.

இந்த விபத்தில் வேனில் இருந்த சவுந்தரராஜ், வேன் டிரைவர் யுவராஜ், செல்வராஜ் மகன் பாரத் (19), கவுசல்யா (52), பெரியசாமி (65), சூர்யா (19), விஜயலட்சுமி (38) உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் எப்போதும் வென்றான் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, காயம் அடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து எப்போதும் வென்றான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story