புரட்டாசி மாதத்தில் மீன் விலை வீழ்ச்சி
விரதமிருக்கும் மாதமான புரட்டாசி மாதத்தில் மீன்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. ஆனால் ஏற்றுமதி செய்யப்படும் இறால், கணவாய் விலையில் மாற்றம் இல்லை.
ராமநாதபுரம்,
கோடைகாலம் முதல் கடும் வெப்பத்தால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து புரட்டாசி மாதத்தில் தான் வெப்பத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் புரட்டாசி மாதம் சூட்டை கிளப்பி விடும் என்ற காரணத்தினால் இந்த மாத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து வருகின்றனர். இதுதவிர புரட்டாசி மாதத்தில் தான் இந்துக்கள் பெரும்பாலானோர் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். இதன்காரணமாக இந்த புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை மக்கள் தவிர்ப்பதால் அசைவ உணவுகளின் பயன்பாடு குறைந்து அதன் விலை வீழ்ச்சி அடைவது வாடிக்கையாகும்.
அதன்படி இந்த ஆண்டும் புரட்டாசி மாதம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் அசைவ உணவுகளின் விலை கணிசமாக குறைந்துள்ளது. குறிப்பாக மீன்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது. கோழிக்கறி உள்ளிட்டவைகளை விட மீன்களின் விலை கடந்த மாதங்களை விட குறைந்துள்ளது. பெரிய வஞ்சிரம் மீன் கிலோ ரூ.800-ல் இருந்து ரூ.600 ஆக குறைந்துள்ளது. சிறிய மீன் ரூ.600 விலையில் இருந்து ரூ.450 ஆக குறைந்துள்ளது. இதுதவிர ரூ.600-க்கு விற்கப்பட்ட வாவல் மீன் ரூ.450-க்கும், சங்கரா மீன் ரூ.200-ல் இருந்து ரூ.160-க்கும் விலை குறைந்துள்ளது.
இதுபோன்ற அனைத்து வகையான மீன்களும் சுமார் 30 சதவீத விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் விரதமிருக்காத அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் ஏற்றுமதி வகையான இறால், கணவாய் ஆகியவற்றின் விலையில் மட்டும் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. வெளிநாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தற்போது அதிக அளவில் இறால், கணவாய் உள்ளிட்டவைகளை வாங்கி பதப்படுத்தி ஸ்டாக் வைக்கும் நடவடிக்கை தொடங்கும் என்பதால் அதன் விலையில் மாற்றமில்லை. மீன்களுக்கு சரியான விலை கிடைக்காததால் மீனவர்களும் அதிகம் செலவழித்து மீன்பிடி தொழிலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
பெரும்பாலான படகுகள் கடற்கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. டோக்கன் வாங்கிய பல படகுகளும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புரட்டாசி மாதத்தில் மீன்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்பட்டாலும் மார்க்கெட்டில் அதன் விலை பெரிதாக ஒன்றும் குறையவில்லை. மீன்களை கொள்முதல் செய்யும் இடங்களில்தான் மீனவர்களிடம் குறைந்த விலைக்கு வாங்கப்படுகிறது. அதனை வாங்கி விற்பனைக்கு கொண்டுவந்த பின்னர் வழக்கமான விலையில்தான் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

Related Tags :
Next Story