தர்மபுரி, பென்னாகரத்தில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தர்மபுரி, பென்னாகரத்தில் அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
பென்னாகரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் விஜயரங்கம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் கணேசன், மாநில செயற்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன், மாவட்ட இணை செயலாளர் சண்முகம், வட்ட பொருளாளர் தர்மலிங்கம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, கிராம ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு வழங்குவதை போல் மாநில அரசு அனைத்து ஓய்வூதியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் மற்றும் மருத்துவபடியை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டு திட்டத்தை அரசே நேரடியாக அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை போல் ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும்.
அரசாணை 56-ஐ ரத்து செய்து அரசு துறைகளில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும். காப்பீடு திட்ட குறைதீர்க்கும் கூட்டம் மற்றும் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் காலமுறை கூட்டத்தை முறையாக அரசு ஆணைப்படி நடத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தமிழக அரசின் அனைத்துத் துறைகளை சேர்ந்த ஓய்வூதியர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story