நீட் தேர்வில் வெற்றி பெறும் வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு, கலெக்டர் அறிவுரை
நீட் தேர்வில் வெற்றி பெறும் வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவுரை கூறினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் போட்டி தேர்வை எதிர்கொள்ளுதல் மற்றும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுதல் தொடர்பாக அந்தந்த மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி கூட்டம் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வருவாய் கூட்டரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில் “குமரி மாவட்டம் கல்வி அறிவில் சிறந்த மாவட்டம் ஆகும். ஆனால் எந்தவொரு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் மருத்துவத்துறைக்கு தேர்ச்சி பெறாதது வருந்தத்தக்கது. ஆனால் இதே நிலை தொடரக் கூடாது. எனவே 2019–2020–ம் கல்வியாண்டில் தேர்வெழுதும் மாணவர்கள் அண்டை மாநிலத்தோடு போட்டி போட்டு அதிக இடங்களை பெற வேண்டும். தலைமை ஆசிரியர்கள், நீட் தேர்வில் வெற்றி பெறும் வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும்’’ என்றார்.
பயிற்சி மையங்கள்
முன்னதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமன், நீட் தேர்வு பற்றி விரிவாக எடுத்துரைத்தார். மேலும் “விடுமுறை நாட்களில் 9 மையங்களில் நடைபெறும் பயிற்சியில் மாணவர்கள் அதிக அளவில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும்“ என்று கூறினார்.
கூட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் பிருந்தா, கூடுதல் மாவட்ட திட்டக்குழு தலைவர் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story