நாதஸ்வரம் ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்


நாதஸ்வரம் ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றம்
x
தினத்தந்தி 3 Oct 2019 4:00 AM IST (Updated: 3 Oct 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழகுளத்தூர் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட நாதஸ்வரம் ஏரி உள்ளது.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழகுளத்தூர் கிராமத்தில் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட நாதஸ்வரம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் சுமார் ஒரு ஏக்கர் அளவிலான பகுதியை அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து விவசாய நிலமாக மாற்றி, தற்போது விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த ஏரிக்கு குடிமராமத்து திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு தூர்வாரும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இதில் ஏரியின் ஒரு பகுதி ஆக்கிரமிப்பில் இருந்ததை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் நேற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதனையடுத்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தற்போது ஏரியை சுற்றி கரை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Next Story