கண்ணன்டஅள்ளி, எர்ரஅள்ளியில் கிராம சபை கூட்டம்


கண்ணன்டஅள்ளி, எர்ரஅள்ளியில் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 3 Oct 2019 4:15 AM IST (Updated: 3 Oct 2019 2:21 AM IST)
t-max-icont-min-icon

கண்ணன்டஅள்ளி, எர்ரஅள்ளியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கண்ணன்டஅள்ளியில் காந்தி பிறந்த நாளையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் ஹரிஹரன் (ஊராட்சிகள்), உதவி இயக்குனர் பழனிசாமி (தணிக்கை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாரதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக ஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

இதில், கூச்சூர் ஏரியில் கருவேல மரங்களை அகற்றுதல், குடிநீர் பிரச்சினைகளை தீர்த்தல் தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்று கொடுக்கப்பட்ட மனு மீது நடவடிக்கை எடுப்பதாக மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.

இந்த கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழரசன், துரைசாமி, மாவட்ட பனைவெல்ல கூட்டுறவு சங்க தலைவர் செந்தில்குமார், நிலவள வங்கி துணைத்தலைவர் முருகன், ஊர் முக்கிய பிரதிநிதிஇளவழகன், கூட்டுறவு சங்க இயக்குனர் பெருமாள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கண்ணன்டஅள்ளி ஊராட்சி செயலாளர் கலைசெல்வி நன்றி கூறினார்.

எர்ரஅள்ளி

காவேரிப்பட்டணம் ஒன்றியம் எர்ரஅள்ளி ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உதவி திட்ட அலுவலர் ஜாகிர் உசேன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், வட்டார மருத்துவ அலுவலர் ஹரிராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கணக்கர் சுந்தரராஜன், ஊராட்சி செயலாளர் சக்தி, கிராம நிர்வாக அலுவலர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர்கள் அருள், மணிவண்ணன், அசோக்குமார், செவிலியர் சித்ரா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Next Story