திருச்சி பேராசிரியை கடத்தலுக்கு உடந்தை: அ.தி.மு.க. நிர்வாகியின் வெளிநாட்டு நண்பர்கள் கைது
திருச்சி பேராசிரியை கடத்தல் வழக்கில் உடந்தையாக இருந்ததாக அ.தி.மு.க. நிர்வாகியின் வெளிநாட்டு நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.
மலைக்கோட்டை,
திருச்சி மலைக்கோட்டை எஸ்.ஆர்.சி.ரோட்டை சேர்ந்தவர் சோமசுந்தரம் என்ற வணக்கம் சோமு (வயது40). இவர், மலைக்கோட்டை பகுதி அ.தி.மு.க. பொருளாளர் பதவி வகித்தார். திருமணம் ஆகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். சமீபகாலமாக மனைவியை பிரிந்து வாழ்ந்த வணக்கம் சோமு, சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வந்த மகாலட்சுமி (32) என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.கடந்த 30-ந் தேதி மகாலட்சுமி தனது தோழி ஹேமாவுடன் கல்லூரிக்கு, வடக்கு ஆண்டாள் வீதி வழியாக நடந்து சென்றார். அப்போது ஆம்புலன்சு வேனில் வணக்கம் சோமு மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேர் மகாலட்சுமியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்ய எண்ணி கடத்தி சென்றனர்.
பேராசிரியை கடத்தப்பட்ட தகவல் அறிந்து கோட்டை போலீசார் வேனை பின்தொடர்ந்து சென்றனர். போலீசார் தேடுவதை அறிந்த சோமு மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடத்தப்பட்ட மகாலட்சுமியை துவரங்குறிச்சியில் நடுவழியில் இறக்கி விட்டு தப்பினர். பின்னர் மகாலட்சுமியை போலீசார் மீட்டு கொண்டு வந்தனர்.
முகநூல் மூலம் அடையாளம்
தலைமறைவான சோமு மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேரை பிடிக்க இன்ஸ்பெக்டர் சண்முகவேல், சப்-இன்ஸ்பெக்டர் தயாளன், சக்திவேல், ஏட்டு முருகன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது சோமு உள்ளிட்ட 6 பேரும் திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இந்த விஷயம் கேள்விப்பட்ட அ.தி.மு.க. தலைமையானது, வணக்கம் சோமுவை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கம் செய்தது.
இதற்கிடையே மீட்கப்பட்ட மகாலட்சுமியிடம் வேனில் யார் யார் இருந்தார்கள்? என்று போலீசார் கேட்டபோது, வணக்கம் சோமுவுடன் வேன் டிரைவர் விக்கி என்ற விக்னேசுவரன், வெளிநாட்டு நண்பர்கள் 2 பேர் உள்பட 5 பேர் இருந்ததாக கூறினார். பின்னர் வணக்கம் சோமு பயன்படுத்திய முகநூல்(பேஸ்புக்) ஐ.டி.யை போலீசார் திறந்து ஆய்வு செய்தனர். அப்போது அவருடன் தொடர்புடைய வட்டார நண்பர்கள் புகைப்படத்துடன் வந்தது. அவற்றில் கடத்தல்காரர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று மகாலட்சுமியை அழைத்து போலீசார் அடையாளம் காணச்செய்தனர். அவர்கள், வேனில் இருந்த 2 பேரை அடையாளம் காண்பித்ததுடன் அவர்கள்தான் நான் தப்பிக்க காரணமாக இருந்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
2 வெளிநாட்டு நண்பர்கள் கைது
உடனடியாக போலீசார் முகநூலில் இருந்து இருவரது முகவரியை கண்டறிந்தனர். அதில் ஒருவர் பெயர் அலெக்ஸ்(36), தஞ்சை நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். மற்றொருவர் பெயர் மரியபிரகாஷ்(36). இவரும் தஞ்சையை சேர்ந்தவர். இவர் மலேசியாவில் வேலைபார்த்து வருகிறார்.இவர்கள் இருவரும் வேனில் செல்லும்போது மதுரையில் இறங்கி கொண்டதாகவும், 2 நாட்கள் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்து விட்டு நேற்று முன்தினம் மாலை திருச்சியில் இருந்து விமானம் மூலம் வெளிநாடு செல்ல தயாராகினர். அதற்காக, தஞ்சையில் இருந்து பஸ் மூலம் திருச்சிக்கு வந்து பழைய பால்பண்ணை ரவுண்டானாவில் பதுங்கி இருந்தபோது போலீசார் அலெக்ஸ் மற்றும் மரியபிரகாஷ் ஆகியோரை கைது செய்தனர்.
காதலித்த பெண்ணை மணக்க விருப்பம்
போலீசாரிடம் இருவரும் கூறுகையில், “வணக்கம் சோமுவுக்கு நாங்கள் கல்லூரி நண்பர்கள். வெளிநாட்டில் இருந்தாலும் முகநூல் மூலம் தகவல் பரிமாற்றம் செய்து கொள்வது வழக்கம். ஒருமுறை, தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அப்பெண்ணை திருமணம் செய்து கொள்ள உதவ வாருங்கள் என சோமு கேட்டுக்கொண்டார். மேலும் விமானத்திற்கான டிக்கெட்டையும் அவரே ஏற்பாடு செய்து கொடுத்தார். அதன்மூலம் 29-ந் தேதி திருச்சி வந்து சேர்ந்தோம். மறுநாள் (30-ந் தேதி) அந்த பெண் இந்த வழியாகத்தான் வருவார். நாம் வேனில் ஏற்றிக்கொண்டு சென்று விடலாம் என சோமு கூறினார். அதன்படி, அப்பெண் ஆண்டாள் வீதி வழியாக வந்ததும் அவரை வேனில் வலுக்கட்டாயமாக ஏற்றி கொண்டு சென்றோம். வேனில் சென்றபோதுதான், அப்பெண்ணிற்கு விருப்பம் இல்லாமல் தாலிக்கட்ட சோமு முயற்சிப்பதை அறிந்தோம். அப்பெண்ணிடம் நாங்கள் கேட்டபோது, ‘ஆணாக இருந்தால் சோமுவை என் முகத்தை பார்த்து பேச சொல்லுங்கள் பார்ப்போம்’ என்றார். எங்களுக்கு பயம் தொற்றிக்கொண்டது. துவரங்குறிச்சி அருகே வந்தபோது சோமுவை தாக்கி, ஏண்டா இப்படி செய்தாய்? என கேட்டோம். உடனே சோமு, அப்பெண்ணை துவரங்குறிச்சி பகுதியில் இறக்கி விட்டார். நாங்கள் இருவரும் மதுரையில் இறங்கி கொண்டோம்” என்றனர்.மேலும் தலைமறைவாக உள்ள சோமு, டிரைவர் விக்கி உள்பட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story