கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூ பணி இடமாற்றம்? மாநில அரசு முடிவு


கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூ பணி இடமாற்றம்? மாநில அரசு முடிவு
x
தினத்தந்தி 4 Oct 2019 3:45 AM IST (Updated: 3 Oct 2019 11:56 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூவை பணி இடமாற்றம் செய்ய மாநில அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெங்களூரு, 

கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூவை பணி இடமாற்றம் செய்ய மாநில அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முதல் பெண் அதிகாரி

கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.யாக இருப்பவர் நீலமணி ராஜூ. கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நீலமணி ராஜூவை மாநில போலீஸ் டி.ஜி.பி.யாக அப்போதைய முதல்-மந்திரி சித்தராமையாவும், முன்னாள் போலீஸ் மந்திரியுமான ராமலிங்க ரெட்டியும் நியமனம் செய்தனர். கர்நாடகத்தில் முதல் முதலாக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் மாநில டி.ஜி.பி.யாக பொறுப்பு ஏற்ற பெருமை இவரையே சேரும்.

இந்த மாதம் முடியும் நிலையில் கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.யாக நீலமணி ராஜூ 2 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளார். இவர் அடுத்த ஆண்டு(2020) ஜனவரி மாதம் பணி ஓய்வு பெற உள்ளார். இந்த நிலையில் நீலமணி ராஜூவை பணி இடமாற்றம் செய்ய எடியூரப்பா அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தகவல்கள் இல்லாததால்...

அதாவது, கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் நடந்த பிறகு மன்சூர்கானின் ஐ.எம்.ஏ. நிறுவன பணமோசடி, செல்போன் ஒட்டுக்கேட்பு வழக்குகள் தொடர்பாக சில விஷயங்களை முதல்-மந்திரி எடியூரப்பா, நீலமணி ராஜூவிடம் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் வழக்குகள் சம்பந்தமாக சரியான தகவல்கள் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், நீலமணி ராஜூ மீது எடியூரப்பா கோபம் கொண்டதாக சொல்லப்படுகிறது.

அதன்பிறகு தான் ஐ.எம்.ஏ. பணமோசடி, செல்போன் ஒட்டுக்கேட்பு ஆகிய வழக்குகளை எடியூரப்பா அரசு சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தது. இதன் தொடர்ச்சியாக கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. நீலமணி ராஜூவை பணி இடமாற்றம் செய்ய மாநில அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் கர்நாடக போலீஸ் டி.ஜி.பி.க்கு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் ‘லாபி‘ நடத்த தொடங்கி உள்ளனர்.

Next Story