மாவட்ட செய்திகள்

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் 4 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை + "||" + Fishermen who were fishing across the border Sri Lanka Navy arrests four persons

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் 4 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மீனவர்கள் 4 பேர் கைது இலங்கை கடற்படையினர் நடவடிக்கை
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்தவர் ராமு(வயது 40). பைபர் படகு உரிமையாளர். நேற்று முன்தினம் ஆறுகாட்டுத்துறையில் இருந்து ராமுவின் பைபர் படகில் ராமு மற்றும் அதே ஊரை சேர்ந்த கஜேந்திரன், வேதாரண்யத்தை சேர்ந்த ராஜேந்திரன், ஜெயராமன் ஆகிய 4 பேரும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே நடுக்கடலில் மீன்பிடித்தனர்.


பின்னர் அவர்கள் படகில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். நெடுந்தீவு அருகே அவர்கள் வந்து கொண்டு இருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் மீனவர்களையும், படகையும் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர்.

மீட்க கோரிக்கை

இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 4 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட படகையும் மீட்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் கைது
திருப்பத்தூரில் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.
2. ராமேசுவரத்தில் தந்தை அடித்து கொலை; வாலிபர் கைது
ராமேசுவரத்தில் தந்தையை அடித்து கொலை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
3. நடிகை பூர்ணாவுக்கு மிரட்டல் விடுத்த முக்கிய குற்றவாளி கைது
நடிகை பூர்ணாவிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த முக்கிய குற்றவாளியை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
4. மாற்றுத்திறனாளி வீட்டில் நகை திருடிய நகராட்சி தூய்மை பணியாளர் கைது
மாற்றுத்திறனாளி வீட்டில் நகை திருடிய நகராட்சி தூய்மை பணியாளரை போலீசார் கைது செய்தனர்.
5. சிவகாசி அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை கணவன் கைது
சிவகாசியில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.