காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி, அரசு ஆஸ்பத்திரி ஆபரேஷன் தியேட்டர் ஊழியர்கள் போராட்டம்


காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி,  அரசு ஆஸ்பத்திரி ஆபரேஷன் தியேட்டர் ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2019 3:00 AM IST (Updated: 4 Oct 2019 1:59 AM IST)
t-max-icont-min-icon

காலிப் பணியிடங்களை நிரப்பக்கோரி அரசு மருத்துவமனை ஆபரேஷன் தியேட்டர் ஊழியர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, 

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உள்ள ஆபரேஷன் தியேட்டர் ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை பணியை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் அரசு மருத்துவமனையின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் துணை தலைவர்கள் மகேந்திரன், ஏழுமலை, செந்தாமரை, செயலாளர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 2 மணி நேரத்திற்கு பின்னர் தங்கள் போராட்டத்தினை கைவிட்டனர்.

அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள ஆபரேஷன் தியேட்டர் அட்டெண்டர், டெக்னீஷியன் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சம்பள முரண்பாடுகளை களைய வேண்டும். வாஷிங் அலவன்ஸ் வழங்க வேண்டும். பணி சுமைக்கு தகுந்தவாறு புதிய ஆபரேஷன் தியேட்டர்களையும், புதிய பதவிகளையும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

Next Story