உள்ளாட்சி தேர்தலுக்காக பெங்களூருவில் இருந்து கொண்டு வரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
உள்ளாட்சி தேர்தலுக்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பெங்களூருவில் இருந்து ஓட்டப்பிடாரத்துக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஓட்டப்பிடாரம்,
உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் 19 பேரூராட்சிகள், 2 நகராட்சிகள், மாநகராட்சி ஆகிய உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வைப்பதற்கு ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கு மற்றும் சுய உதவிக்குழு கட்டிடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக 1,789 வாக்குப்பதிவு எந்திரங்கள், 3 ஆயிரத்து 450 வாக்குச்சீட்டு எந்திரங்கள் பெங்களுரூவில் இருந்து நேற்று முன்தினம் இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டப்பிடாரம் கொண்டு வரப்பட்டது.
ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன. அவற்றை மாவட்ட கலெக்டரின் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் சந்திரசேகர், மாவட்ட கலெக்டரின் ஊரக வளர்ச்சி துறை நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட தேர்தல் பிரிவு வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன், ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர் ராமராஜ், கூடுதல் ஆணையாளர் வெங்கடாச்சலம் ஆகியோர் பார்வையிட்டனர்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள அறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story