நாராயணி பீடத்தில் நடந்த திரிசக்தி மகா யாகத்தில் கவர்னர் பங்கேற்பு


நாராயணி பீடத்தில் நடந்த திரிசக்தி மகா யாகத்தில் கவர்னர் பங்கேற்பு
x
தினத்தந்தி 4 Oct 2019 4:45 AM IST (Updated: 4 Oct 2019 3:33 AM IST)
t-max-icont-min-icon

நாராயணி பீடத்தில் நடந்த திரிசக்தி மகாயாகத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால்புரோகித் கலந்து கொண்டார்.

வேலூர், 

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணிபீடத்தில் கடந்த 29-ந் தேதி முதல் நவராத்திரி விழா தொடங்கியுள்ளது. இந்த விழா வருகிற 8-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி தினமும் நாராயணி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் நாராயணி பீடத்தில் திரிசக்தி மகாயாகம், லட்சுமிநாராயணி கோவிலில் மகாலட்சுமி மகாயாகம் ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று நாராயணி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று நடந்த திரிசக்தி மகாயாகத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால்புரோகித் கலந்து கொண்டார். அவருக்கு கோவில் சார்பில் பூரணகும்ப மரியாதை வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு, சக்திஅம்மா பிரசாதம் மற்றும் நினைவுப் பரிசை வழங்கினார்.

யாகத்தில் கலெக்டர் சண்முகசுந்தரம், போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார், ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ்பாபு, அறங்காவலர் சவுந்தர்ராஜன், நாராயணி பீட மேலாளர் சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் தங்கக்கோவில் மற்றும் பெருமாள் கோவில்களுக்கு சென்று கவர்னர் பன்வாரிலால்புரோகித் சாமி தரிசனம் செய்தார். அவரது வருகையையொட்டி நகரின் பல இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக கவர்னர் பன்வாரிலால் புரோகித், வேலூர் சத்துவாச்சாரி எத்திராஜ் மெட்ரிக் பள்ளியில் ரெட்கிராஸ் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் ரெட்கிராஸ் தமிழக பிரிவு தலைவர் டாக்டர் ஹரிஸ் எல்.மேதா, பொதுச்செயலாளர் நஸ்ரூதின், மாவட்ட கிளை துணை தலைவர் வெங்கடசுப்பு, தலைவர் பர்வதா, கிளை செயலாளர் இந்தர்நாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story