பெருந்துறை, அந்தியூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


பெருந்துறை, அந்தியூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2019 4:15 AM IST (Updated: 4 Oct 2019 3:34 AM IST)
t-max-icont-min-icon

பெருந்துறை, அந்தியூரில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

ஈரோடு, 

பெருந்துறை அரசு போக்குவரத்து கிளை முன்பு நேற்று, போக்குவரத்து தொழிலாளர்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்றுச் செல்லும் தொழிலாளர்களை தண்டிக்கும் விதமாக, அவர்களுடைய ஓய்வூதிய பணத்தை பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும். பணி கணக்கு பற்றி முற்றிலும் தெரியாத அலுவலர்களை பயன்படுத்தி, தொழிலாளர்களின் எதிர்கால ஊதியத்தில் பிடித்தம் செய்வது போன்ற தவறுகளை செய்யக்கூடாது. ஓய்வூதியர்களின் பணப்பலன்களை உடனே வழங்கவேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கூட்டமைப்பு தலைவர் ரமேஷ் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். பல்வேறு போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள்.

இதேபோல் கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தியூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தொ.மு.ச. கிளை கழக தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். மாநில பிரதிநிதி வேலுமணி கோரிக்கைகளை விளக்கி பேசினார். 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டார்கள். காலை 11.30 மணிக்கு தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டம் 12 மணி வரை நடைபெற்றது.

Next Story