இந்திய குடியரசு கட்சியின் 6 வேட்பாளர்கள் அறிவிப்பு பல்தானில் தாதா சோட்டாராஜன் தம்பி போட்டி

இந்திய குடியரசு கட்சியின் 6 வேட்பாளர்கள் அறிவிப்பு பல்தானில் தாதா சோட்டாராஜன் தம்பி போட்டி
x
தினத்தந்தி 4 Oct 2019 4:15 AM IST (Updated: 4 Oct 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இந்திய குடியரசு கட்சியின் 6 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் பல்தானில் தாதா சோட்டாராஜனின் தம்பி தீபக் நிகல்ஜே போட்டியிடுகிறார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இந்திய குடியரசு கட்சியின் 6 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் பல்தானில் தாதா சோட்டாராஜனின் தம்பி தீபக் நிகல்ஜே போட்டியிடுகிறார்.

வேட்பாளர்கள் அறிவிப்பு

மராட்டிய சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா- சிவசேனா கூட்டணியில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலேயின் இந்திய குடியரசு கட்சியும் இடம் பெற்று உள்ளது.

அந்த கட்சிக்கு 6 தொகு திகள் ஒதுக்கப்பட்டு உள் ளது. இதன்படி தனது கட்சிக்கு வழங்கப்பட்ட மான்கூர்டு சிவாஜி நகர், சோலாப்பூரில் உள்ள மால்சிராஸ், சத்தாராவில் உள்ள பல்தான், பர்பனியில் உள்ள பாத்ரி, நாந்தெட்டில் உள்ள பந்தாரா, நைகாவ் ஆகிய 6 தொகுதிகளுக்கும் ராம்தாஸ் அத்வாலே வேட்பாளர்களை அறிவித்து உள்ளார்.

சோட்டாராஜன் தம்பி

இதில், பல்தான் தொகுதியில் போட்டியிடும் தீபக் நிகல்ஜே, டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நிழலுலக தாதா சோட்டாராஜனின் தம்பி ஆவார்.

தீபக் நிகல்ஜே ஏற்கனவே இந்திய குடியரசு கட்சி சார்பில் மும்பை செம்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்திருந்தார்.

தற்போது போட்டியிடும் பல்தான் தொகுதியில் தான் அவரது சொந்த ஊர் உள்ளது. அங்கு அவருக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாக இந்திய குடியரசு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story