சிறுகூடல்பட்டியில் கிராம சபை கூட்டம்; கலெக்டர் கலந்து கொண்டார்
திருப்பத்தூரை அடுத்த சிறுகூடல்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் கலந்து கொண்டார்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் வட்டம், குமாரப்பேட்டை ஊராட்சி, சிறுகூடல்பட்டி கிராமத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கலெக்டர் ஜெயகாந்தன், திட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் பேசியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் காந்தி பிறந்ததினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த வருடமும் கிராம சபை கூட்டம் நடைபெறுகின்றன. இதன் நோக்கம் அந்தந்த ஊராட்சி பொதுமக்களுக்கு அனைத்து வகையான அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்திட வேண்டும் என்பதே ஆகும். எனவே, ஒவ்வொரு ஊராட்சியிலும் இதுபோன்ற கிராமசபை கூட்டங்கள் நடைபெறும் போது அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். அப்போது தான் ஊராட்சியின் வளர்ச்சி மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதித்து மக்களின் ஒருமனதான தீர்மானத்தை நிறைவேற்றி திட்டங்களை பெற்றிட முடியும்.
மேலும் ஒவ்வொருவரின் அடிப்படை தேவைகள் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளை பெற இந்த கூட்டம் பயனுள்ளதாக இருக்கும். ஊராட்சியில் வரத்துக்கால்வாய்களை சீரமைத்து மழைநீரை சேமித்து பயன்படுத்த வேண்டும். நீர்நிலை தேக்கத் தொட்டியில் குளோரைடு மூலம் சுத்தம் செய்யப்பட்டதா என்பதை பொதுமக்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். வீடு மட்டுமன்றி தாங்கள் வசிக்கும் பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
குடிமராமத்து பணிகள்
அதேபோல் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை எதிர்கால தலைமுறையின் பாதுகாப்பை கருதி தவிர்க்க வேண்டும். அதுபோல் தரமற்ற பிளாஸ்டிக் பொருட்களினால் பல்வேறு நோய்கள் பரவும் சூழ்நிலை உருவாகுகின்றன. அதை ஒழிக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு தூய்மை பகுதியாக மாற்றிட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் முழு அளவில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
மேலும் அனைத்து பகுதிகளிலும் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர் மேலாண்மை என்பது ஒரு கூட்டு முயற்சி. இந்த திட்டம் அந்தந்தப் பகுதி மக்களின் பங்களிப்புடன் சிறப்பாக செயல்படும். எனவே அந்தந்த பகுதி மக்கள் இதை திட்டமிட்டு சீரமைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த சிறுகூடல்பட்டி சிறப்பு வாய்ந்த இடமாகும். காரணம் இது கவிஞர் கண்ணதாசன் பிறந்து வளர்ந்த இடம். இந்த ஊரின் பெருமையை சிறப்பிக்கும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளும், உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பொதுமக்களின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றி தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஊர்வலம்
தொடர்ந்து பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை அனைவரும் எடுத்து கொண்டனர். இதையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தில் குப்பைகளை சேமித்து வைக்காமல், தரம் பிரித்து தினமும் துப்புரவு பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என்று விளக்கப்பட்டது. கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, உதவி இயக்குனர் விஜயநாதன், மாவட்ட சமூகநல அலுவலர் வசந்தா, மாவட்ட தூய்மை இயக்க ஒருங்கிணைப்பாளர் பல்தாசர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பர்னபாஸ், சுமதி, தாசில்தார் தங்கமணி மற்றும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story